வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு… சீர்மரபினர் உள்பட பிற சாதியினருக்கும் ஒதுக்கீடு : முதலமைச்சர் பழனிசாமி அதிரடி!!

26 February 2021, 4:33 pm
Quick Share

சென்னை : வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட்டனர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். அப்போது, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இதில், வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். பின்னர், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. இதன்மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, சீர் மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் மற்ற சாதியினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வன்னியர்களுக்கான இந்த ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும், 6 மாதங்களுக்கு பிறகு மாற்றியமைக்கப்படும் என முதலமைச்சர் எடபபாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமியின் இந்த நடவடிக்கை வன்னியர்கள் உள்பட பிற சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 32

0

0