காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் . இவருடைய மனைவி தமிழரசி.
இவர்களுக்கு அரசு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்கியது. அதை கிராம கணக்கில் ஏற்ற திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை அணுகியுள்ளார்.
இதற்கு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கருணாகரன் லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியாக 15,000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அளிக்க உறுதி செய்யப்பட்டடது.
இந்நிலையில் லஞ்சம் தர குமரவேலுக்கு மனம் இல்லாத காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் இன்று திருமுக்கூடல் சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் அருகே 15,000 பணத்துடன் குமரவேலை வருமாறு கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் அழைத்துள்ளார்.
அருங்குன்றம் பகுதியில் வைத்து கருணாகரன் பணம் பெற்ற போது, அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் அவரை கைது செய்து திருமுக்கூடல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.