முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவு: தலைவர்கள் இரங்கல்…!!

Author: Aarthi
13 October 2020, 9:45 am
cm cry - updatenews360
Quick Share

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

dapadi mom - updatenews360

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் காலமானார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை காலமானார்.

தகவல் அறிந்ததும் காரில் சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, அன்பழகன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சரோஜா, விஜயபாஸ்கர், கருப்பண்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், பல தலைவர்கள் முதலமைச்சர் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பகல் 12 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது தாயாருக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

தாயாரை இழந்து வாடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

cry-cm-4-updatemnews360

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் திரு.பழனிசாமி அவர்களின் தாயார் திருமதி.தவசாயி அம்மாள் மறைவெய்திய செய்தியால் மனவேதனைக்கு உள்ளானேன்.
அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன்.
அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் பழனிசாமி, குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் ஆறுதல்களும்! என பதிவிட்டுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Views: - 44

0

0