வேதா இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் : தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

29 January 2021, 1:04 pm
vedha house - updatenews360
Quick Share

சென்னை : வேதா இல்லத்தின் சாவியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா காலமான நிலையில் 2017ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரின் போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு ஜெ. தீபா, தீபக் இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், இழப்பீட்டுத் தொகை செலுத்தியதால் போயஸ் தோட்ட வீடு அரசு உடைமையானது என்றும், இழப்பீட்டுத் தொகை பெற வேண்டிய உரியவர்கள் சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி திறக்கலாம் என்றும், ஆனால், பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி முடிந்த பிறகு வேதா இல்லத்தின் சாவியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

தனிநீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய இழப்பீடு கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருப்பதால், சாவியை திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது.

Views: - 34

0

0