தேசிய பத்திரிக்கை தினம்: அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் குடியசு துணைத்தலைவர் வாழ்த்து…!!

16 November 2020, 11:54 am
Venkaiah_Naidu_UpdateNews360
Quick Share

சென்னை: தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் குடியசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி, தேசிய பத்திரிக்கையாளர் தினமாக 1996ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம்கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய பத்திரிகை தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் குடியசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தேசிய பத்திரிகை தினமான இன்று அனைத்து ஊடக ஊடக ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு தகவல் அளிப்பதிலும், அதிகாரம் அளிப்பதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொற்றுநோய்களின் போது மக்களை தொடர்ந்து தகவல் கொடுத்ததற்காக ஊடக ஊழியர்களை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Views: - 34

0

0