குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா உறுதி!
29 September 2020, 10:58 pmகுடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 35 லட்சத்து 52 ஆயிரத்து 625 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 239 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 6 ஆயிரத்து 381 பேர். இந்தியாவில், நாட்டில் குணமடைதல் விகிதம் 83 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. சிகிச்சையில் உள்ள நபர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 41.5 லட்சம் அதிகமாகும்.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது மனைவிக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.