இவ்வளவு தொகுதி தானா … திமுகவுடன் கூட்டணியே தேவையில்லை : திருமாவளவனிடம் வலியுறுத்தும் விசிக நிர்வாகிகள்..!!

3 March 2021, 11:54 am
Thirumavalavan - stalin - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி குறைந்த தொகுதிகளை வழங்கப்படும் என்ற ஸ்டாலினின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

அந்த வகையில், திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒன்றை மட்டும் குறைத்து 9 தொகுதிகள் வேண்டுமென விடுதலை சிறுத்தை வலியுறுத்தி வருகிறது. அதுவும், தனித் தொகுதிகளுடன் பொது தொகுதிகள் சிலவற்றையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை வழங்க திமுக மறுப்பு தெரிவித்து வருகிறது.

Stalin Condemned- Updatenews360

திமுகவின் இந்த பிடிவாதத்தினால் அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், 5 தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்றால், திமுகவுடன் அப்படியொரு கூட்டணி தேவையில்லை என திருமாவளவனிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், விரைவில் கூட்டணி மாற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், திமுக – விசிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படாத நிலையில், வேட்பாளர் நேர்காணல், தேர்தல் அறிக்கை வெளியீடு அறிவிப்பு உள்ளிட்ட திமுகவின் நடவடிக்கைகள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 113

0

0