அ.இ.த.வி.ம.இ. கட்சியில் பிளவு…!! மகன் விஜயை தொடர்ந்து மனைவியும் எதிர்ப்பு… அதிருப்தியில் எஸ்.ஏ. சந்திரசேகர்..!!

6 November 2020, 8:16 pm
Vijay family - updatenews360
Quick Share

எஸ்.ஏ. சந்திரசேகர் ஆரம்பித்த கட்சிக்கு மகனும், நடிகருமான விஜய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சியில் இருந்து மனைவி ஷோபாவும் விலகியிருப்பது அ.இ.த.வி.ம.இ. கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தது தான்தான் என நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கை நடிகர் விஜய்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

vijay and his father - updatenews360

தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும்,‌ எனக்கும்,‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடர்பும்‌ இல்லை என்றும், என்‌ பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கத்தின்‌ பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

கட்சி தொடங்கிய விவகாரத்தில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே மோதல் ஏற்பட்டு விட்டதாகவே அமைந்தது.

Vijay_and_his_parents - updatenews360

இந்த நிலையில், தனது கணவர் தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சியில் பொருளாளராக நான் இல்லை, விலகிவிட்டேன் என்று நடிகர் விஜயின் தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ” தன்னிடம் அரசியல் பற்றி பேச வேண்டாம் என விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பலமுறை கூறிவிட்டார். ஆனால், அவர் கேட்டபாடில்லை. இதனால், விஜய் எஸ்.ஏ.சி.யிடம் பேசுவதில்லை. அரசியல் கட்சி தொடங்குவது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார். பிறகு, கட்சி தொடங்குவது எனக் கூறி 2வது முறையாக கையெழுத்து கேட்டார். நான் போடவில்லை. எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.

Views: - 25

0

0