2026 தேர்தலில் 2வது இடத்தில் விஜய் கட்சி.. அதிமுக முன்னாள் அமைச்சரே இப்படி சொல்லிட்டாரே!

Author: Udayachandran RadhaKrishnan
27 செப்டம்பர் 2024, 5:49 மணி
Vijay
Quick Share

2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 2வது இடமா என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிவந்திபட்டி மற்றும் திட்டங்குளம் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு பயணியர் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி கூறுகையில், அதிமுகவில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது தான் திமுகவால் வழக்கு தொடரப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது கரூரில் பேசிய அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு செந்தில் பாலாஜி சிறை செல்வார் என்று பேசினார். ஆனால், திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோதுதான் அவர் சிறை சென்றிருக்கிறார்..

மேலும் படிக்க: பாலியல் தொழிலுக்கு அழைத்த திருநங்கைகள்? தடியடி நடத்திய போலீசார்.. வீடியோ வைரல் : வலுக்கும் கண்டனம்!

ஆனால், செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் இருந்ததை சாதனையாக சொல்கின்றனர். செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக்க படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது அதற்கென்று ஒரு விதி ,மரபு இருக்கிறது முதல்வர் விதியை கடைப்பிடிக்க போறாரா? அல்லது மரபை மதிக்கப் போகிறாரா? என்பது அமைச்சரவை மாற்றத்தில் தெரியவரும்.

2026ல் விஜய் கட்சி இரண்டாம் இடத்திற்கு வரும். அதிமுக வாக்கை இரண்டாக பிரிப்பர் என்று திருமாவளவன் கூறியதற்கு, ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை கூறுவார்கள். 2026 ல் அதிமுக ஆட்சிக்கு வரும். எதிர் யார் என்பது இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டது திருமாவளவனே ஒப்புக் கொள்கிறார் திமுக எதிர்க்கட்சி கூட வர முடியாது என்று, திருமாவளனுக்கு திமுக எதிர்க்கட்சியாக வருவது கூட பிடிக்கவில்லை போல தெரிகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி, ஹாக்கி மைதானம் என பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து உள்ளோம்..உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கு தொகுதி பிரச்னை தொடர்பாக 10 கோரிக்கையை முன் வைத்து அனுப்பினோம்…

7 கோரிக்கைகள் எங்கள் ஆட்சி காலத்தில் திட்டம் உருவாக்கப்பட்டு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை தான் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதுவரை ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றி தரவில்லை. இந்த அரசு மக்களை தான் ஏமாற்றுகிறது என்று பார்த்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரையே ஏமாற்றுகின்ற அரசாக உள்ளது.

ஓபிஎஸ் ஏற்கனவே தர்ம யுத்தம் நடத்தி விட்டார்.. இனி வேண்டும் என்றால் தர்மயுத்தம் படம் வேண்டும் என்றால் எடுக்காலம் அந்த படமும் வந்து விட்டது. மேலும், தர்மயுத்தத்திற்கு போய் தான் அந்த நிலைக்கு சென்று விட்டார் இன்னும் எத்தனை முறை தான் தர்ம யுத்தம் நடத்துவர் என்று தெரியவில்லை என்றார்

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 114

    0

    0