‘விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ : மியாட் மருத்துவமனை நிர்வாகம்!!

By: Babu
7 October 2020, 12:58 pm
Vijayakanth- updatenews360
Quick Share

2வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கமான சோதனைக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

Vijayakanth 1-updatenews360

இதையடுத்து, 2வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, ‘தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கேப்டனின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என தேமுதிக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கதிரியக்க மதிப்பீடு செய்ததில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்,” எனத் தெரிவித்துள்ளது.

Views: - 41

0

0