விஜய்காந்த் குடும்பத்தில் வெடித்த சொத்துத் தகராறு..? மருமகன் vs மாமன் இடையே எழுந்த மோதல் : பரிதவிக்கும் பிரேமலதா…!!!

Author: Babu Lakshmanan
7 February 2022, 4:48 pm
Quick Share

ஒருவர் குறுகிய காலத்தில் அரசியலில் உச்சம் அடைந்ததும், உச்சம் அடைந்த உடனேயே அதளபாதளத்திற்கு சென்றதும் விஜய்காந்த்தும், அவரது தேமுதிக கட்சியும்தான். திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த விஜய்காந்த், அரசியலில் களம் காண ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும், உண்மையில் அவரது சொத்தை சேதப்படுத்தியதுதான், அவரை அரசியலில் பிரவேசிக்க வைத்தது.

vijayakanth updatenews360

திமுக ஆட்சியில் இருக்கும் போது சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, சென்னை கோயம்பேடில் விஜய்காந்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை இடித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இதற்கு விஜய்காந்த் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை இடிக்காமல் கட்டுவதற்கான ஐடியாவும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், திமுக அரசு அதனை இடித்தது. இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய்காந்த், அரசியல் கட்சிக்கு அரசியல் கட்சியால்தான் பதிலடி கொடுக்க முடியும் என்று எண்ணி, தேமுதிக என்ற கட்சியை உருவாக்கினார்.

jayalalitha - vijayakanth - updatenews360

அவர் நினைத்ததைப் போலவே, திமுக தலைவர் கருணாநிதியை மிக மூர்க்கத்தனமாக எதிர்த்ததால், எதிர்பார்த்ததை விட தேமுதிக வளர்ந்தது. கூடவே, மிகவும் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்த்தும் அவருக்கு கிடைத்தது. மேலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவையும் நேரடியாக எதிர்த்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். ஆனால், அடுத்த சில காலத்திலேயே அவரது உடல் நலனும், தொடர்ந்து அவரது கட்சியும் சரிவை சந்தித்தது.

இதன்பிறகு, விஜய்காந்த் இருக்கும் போதே கட்சிக்குள் வந்த அவரது மனைவி பிரேமலதா, கூடவே தனது தம்பி சுதீஷையும் அழைத்து வந்தார். இருவரும் கட்சியின் முக்கிய தூண்களாக உருவெடுத்தாலும், விஜய்காந்த் செய்ததை அவர்களால் செய்ய முடியவில்லை. சீட்டுக்கும், எம்பி பதவிக்கும் பிற கட்சிகளிடையே கையேந்தும் நிலைதான் தேமுதிகவுக்கு உருவானது.

Vijayakanth - updatenews360

இதைத் தொடர்ந்து, அடுத்த முயற்சியாக விஜய்காந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனை கட்சிக்குள் கொண்டு வந்தார் பிரேமலதா. உடல் எடையை குறைத்து தனது தந்தை ஸ்டெயிலையே கையில் எடுத்து, ஆரம்பத்திலேயே கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக விமர்சித்து தெறிக்கவிட்டார். இனி இவர்தான் தேமுதிகவின் முகம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் புஷ்வானம் போல பொசுங்கி போனார்.

இருப்பினும், தாய் மற்றும் தாய் மாமன் செய்த சில தவறுகளை உணர்ந்த விஜய பிரபாகரன், சில அதிரடி முடிவுகளை எடுக்க விரும்பினார். இதற்கு கொஞ்சம் பணச் செலவுகள் தேவைப்பட்டது. எனவே, தந்தையின் பல கோடி சொத்துக்களில், சிலவற்றை கட்சிக்காக பயன்படுத்த அவர் முடிவு செய்தார். ஆனால், தந்தையில் முக்கிய சொத்துக்களும், கட்சியின் அதிகாரமும் சுதீஷ் கையில் இருக்கிறது.

‘எடுத்த எடுப்பிலேயே பணத்தை வாரி இறைக்க வேண்டாம். இள ரத்தம் நீ அவசரப்பட்டு பணத்தை அள்ளி வீசி காலி செய்துவிடக் கூடாது. நமக்கான நேரம் வரும் வரை காத்திரு,’ என்று விஜய பிரபாகரனின் முடிவுக்கு மாமன் சுதீஷ் தடை போட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கட்சிக்காக தனது தந்தையின் சொத்துக்களை விற்க எனக்கே தடை போடுவதா..? என விஜய பிரபாகரனின் எண்ணமாக இருக்கிறதாம். இதனால், மாமன், மருமகன் இடையே கருத்து ரீதியான முட்டல் மோதல் உருவாகியிருக்குது. இருவருக்கும் இடையிலான இந்த மோதலால் பிரேமலதாதான் சிக்கி தவித்து வருகிறாராம்.

தனது கணவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்திற்கும், கட்சிக்கும் பக்க பலமாக இருக்கும் தம்பியை எதிர்ப்பதா..? அல்லது தந்தையின் கணவை நனவாக்க துடிக்கு மகனுக்கு தடை போடுவதா..? என்று புரியாமல் தடுமாறி வருகிறாராம்.

தேமுதிக தலைவரின் வீட்டில் இந்த மோதல் எழுந்த நிலையில், சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரனுக்கு இடையே எந்தப்பிரச்சனையும் இல்லை என அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறாராம். இன்னும் எத்தனை காலம்தான் மூடி மறைக்க முடியும். எது உண்மை..? எது பொய்..? என்று இன்னும் சில நாட்களில் வெளிச்சத்திற்கும் வந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Views: - 561

0

0