மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். அவ்வப்போது அவருக்கு மருத்துவமனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்றார். பின்னர் பூரண குணமடைந்த பிறகு கடந்த டிசம்பர் 11ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் டிசம்பர் 14ல் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். இந்த சூழலில், திடீரென நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மியாட் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் வருகை தருவார்கள் என்பதால் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படும் தகவலை அறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கண்ணீருடன் கதறியபடி குவிந்து வருகின்றனர். எனவே, அவரது வீட்டின் முன்பு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, விஜயகாந்த்தின் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இன்று 9 மணியளவில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகிறது. அதில், அவரது உடல்நிலை குறித்த தகவல் தெரிய வரும்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.