ஆளுநர் உரையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எங்கே…? அதிருப்தி தெரிவித்த விஜயகாந்த்..!!

21 June 2021, 6:11 pm
vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : திமுகவின் அறிவித்த எந்த தேர்தல் வாக்குறுதியும் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வணக்கம் என தமிழில் கூறி ஆளுநர் தனது உரையை தொடங்கினார். நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், சிங்காரச் சென்னை 2.0 மற்றும் பொருளாதாரத்தை உயர்த்த குழு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

ஆளுநரின் உரையை விமர்சித்த எதிர்கட்சியினர், அறிக்கையில் எந்தவித சிறப்பம்சங்களும் இடம்பெற வில்லை என விமர்சித்தனர். அதோடு, திமுக தேர்தலில் போது அறிவித்த வாக்குறுதிகளான, மகளிருக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை, பெட்ரோல் விலை ரூ.5ம், டீசல் விலை ரூ.4ம் குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை எனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி உள்பட திமுகவின் எந்த தேர்தல் வாக்குறுதியும் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பெட்ரோல் ₹5 & டீசல் ₹4 குறைப்பு, மதுவிலக்கு, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 நிதியுதவி, வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டருக்கு ₹100 மானியம் உள்ளிட்ட, திமுக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்பு, ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 167

0

0