கேரளாவில் விஜய் கொடுத்த கட்டிப்பிடி வைத்தியம்… குணமாகும் சிறுவன்.. நீலாங்கரையில் காத்திருக்கும் குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 செப்டம்பர் 2024, 11:52 காலை
Vijay
Quick Share

விஜய் பாட்டை கேட்டவுடன் சந்தோசமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பெருமூலைவாதம் பாதிக்கப்பட சிறுவன். விஜய் நடித்து தற்போது வெளியாகி உள்ள கோட் திரைப்பட படபிடிப்பு திருவனந்தபுரம் பகுதியில் நடந்தபோது அங்கே ரிஷான் என்ற குழந்தையை நடிகர் விஜய் சந்தித்தார்.

அந்த காணொளி வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் அந்தக் குழந்தையை விஜய் சந்தித்த பிறகு குழந்தையின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் உள்ளதாக எண்ணிய பெற்றோர்கள், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்திற்கு
குடும்பத்துடன் வந்து எப்படியாவது விஜயை சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலோடு சுமார் ஆறு மணி நேரம் நடிகர் விஜய் வருவார் தன் குழந்தையை பார்ப்பார் என நடிகர் விஜயின் வீட்டு வாயிலில் காத்திருந்தனர்

Kerala vijay hug fan

அவர்கள் கூறுகையில் பல லட்சம் செலவு செய்தும் தன் குழந்தைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் நடிகர் விஜய் சந்தித்த பின்பு தான் தன்னுடைய மகன் சுறுசுறுப்பாகவும் நடவடிக்கையில் வித்தியாசமும் காணப்படுகின்றன.

ஆகையால் எவ்வளவு செலவு செய்தும் கிடைக்காத எங்கள் சந்தோஷத்தை நடிகர் விஜய் மூலம் எங்கள் மகனுக்கு கிடைப்பதால் நான் என் குடும்பமும் நடிகர் விஜயின் வீட்டு வாயிலில் காத்திருக்கிறோம்.

ஒருமுறை என்னுடைய மகனை சந்தித்தால் அவன் கொஞ்சமாவது குணமடைவான் என நம்புகிறோம் எனவும், விஜயை கண்டதும் வழக்கம் போல் செயல்படும் நடத்தையை விட விஜயை கண்டதற்கு பிறகு அவரது செயலில் முன்னேற்றம் அடைந்ததாக அவரது தாயும் தந்தையும் கூறுகின்றனர்.

விஜயை காண்பதற்காக வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்த ரிஷான் குடும்பத்தினர்
தீடீர் என்று வந்த விஜய்யின் காரை பார்த்ததும் அந்த சிறுவன் துள்ளி குதித்து ஓட முயன்றது அப்பகுதி இருந்த அனைவரையும் நெகிழ்சியில் ஆழ்த்தியது.

Kerala vijay fans

அதுமட்டுமின்றி விஜய்யின் பாடலை இசைக்க அச்சிறுவன் இருக்கும் சேரில் இருந்து எழுந்து ஆடத் துடிப்பதும் பார்போர் கண்களை கலங்க செய்தது.

விஜய் வந்த கார் நிற்காமல் உள்ளே சென்றதால் பல மணி நேரமாக காத்திருந்த ரிஷான் அவர் குடும்பத்தார் ஏக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சற்று நிறுத்தி ரிஷானை விஜய் சந்தித்திருந்தால் சந்தோசத்தின் மூழ்கி இருப்பான் தற்போது ரிஷான் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி இருக்கிறான்

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 195

    0

    0