#Corona விடாது துரத்தும் விழுப்புரம்… புரட்டி எடுக்கும் பெரம்பலூர்..!

9 May 2020, 12:34 pm
Corona_RPT_UpdateNews360
Quick Share

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 33 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் கொரோனாவானது சென்னை மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களுக்கும் மிக வேகமாக பரவியுள்ளது. கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

கோயம்பேட்டில் கொரோனா தாக்கம் அதிகமானதால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வந்த முடிவுகள்படி பெரம்பலூரில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. அதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது.

பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தையிலிருந்து வந்தவர்கள். அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா உறுதியானது. அதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 240ஆக அதிகரித்துள்ளது.  14 பேரும் வசித்த 6 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.