விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன் தெரியுமா..? சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம்..!!!

Author: Babu Lakshmanan
4 September 2021, 12:50 pm
Vinayagar sathurthi 1- updatenews360
Quick Share

சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

ஆண்டுதோறும் இந்து முன்னணியின் சார்பில் நடைபெற்று வந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் ஆறு, குளங்களில் கரைப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இதனிடையே, கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் எனக் கூறி வருகின்றனர்.

அதேவேளையில், விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், அதற்குள் தனது முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது :- மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்ததால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது, என தெரிவித்தார்.

Views: - 205

0

0