விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெபயாத்திரை : கிறிஸ்துவ கல்லூரி தலைவரின் அழைப்பால் சர்ச்சை..!!!

Author: Babu Lakshmanan
1 September 2021, 1:58 pm
vinayagar chathurthi - updatenews360
Quick Share

சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெபயாத்திரைக்கு கிறிஸ்துவ கல்லூரியின் தலைவர் அழைப்பு விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்., 10ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை இந்து முன்னணி, வி.எச்.பி, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, விநாயகக் கடவுளின் சிலையை ஒவ்வொரு தெருக்களிலும் பிரதிஷ்டை செய்து, 3 நாட்கள் வழிபாட்டுக்கு பிறகு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால், விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கப்படும் என இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. டாஸ்மாக் திறக்கப்பட்டிருக்கும் போது, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மட்டும் தடை விதிப்பது ஏன்..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் அரசின் உத்தரவை மதிக்க தேவையில்லை என்றும், கடந்த ஆண்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு கட்டுப்பட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும், தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும், இதற்காக எந்த காலத்திலும் போலீஸிடம் அனுமதி கோரியதில்லை என்று இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இதனால், வரும் 10ம் தேதி திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்தால், அதற்கு போட்டியாக வாகனங்களில் ஜெப யாத்திரை நடத்த வேண்டும் என்று கிறிஸ்வதுவர்களுக்கு கோவை செயின்ட் பால் கல்லூரியின் தலைவர் டேவிட் எழுதிய கடிதத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :- இந்த ஆண்டு செப்., 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், 10ம் தேதியோ அல்லது 9ம் தேதியோ அல்லது 9ம் தேதியோ அல்லது ஒவ்வொருவருக்கு வசதியான இன்னொரு நாளிலோ.? ஜெப யாத்திரையை உங்கள் சபையில் மிஷினரி, பணித்தலங்களில் உள்ள போதகர்கள், மூப்பர்கள் மற்றும் விசுவாசிகளை பயன்படுத்தி நடத்த விரும்புகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து அமைப்பினருக்கு போட்டியாக ஒரு கிறிஸ்துவ ஆசிரியர் இதுபோன்று கடிதம் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், மத மோதலுக்கு தூண்டுதலாகவும் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 384

0

0