விவிஐபிகளுக்கான ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் டெல்லி வந்தது : இதில், இத்தனை சிறப்பம்சங்களா..?

By: Babu
1 October 2020, 5:50 pm
air-india-one - updatenews360
Quick Share

டெல்லி : குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்கான ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் இந்தியா வந்தடைந்தது.

நாட்டின் மிக முக்கிய தலைவர்களான குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் பயணிக்கும் வகையிலான நவீன வசதிகள், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி, ரூ.8,400 கோடி மதிப்பில் 2 விமானங்களை இந்தியாவிற்கு விற்க போயிங் நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி, அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான வசதிகளுடன் ஏர் இந்தியா ஒன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 13,000 கி.மீ. தூரத்தை தடையின்றி கடந்து இந்தியா வந்துள்ளது. இந்த விமானத்தின் சிறப்பம்சமாக, எதிரிகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் விதமாக, பாதுகாப்பு உபகரணங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், வானில் எத்தனை உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தொலை தொடர்புகளை தடையின்றி பெற முடியும். குறிப்பாக, அழைப்புகளை இடைமறிக்கவோ, ஹேக் செய்யவோ முடியாது.

கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் விவிஐபிகளின் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த போயிங் விமானத்திற்கு மாற்றாக இந்த ஏர் இந்தியா ஒன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்திற்கான ஆர்டர் 2006ல் கொடுக்கப்பட்ட நிலையில், 2018ம் ஆண்டு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தப்படுத்தி, தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

Views: - 50

0

0