ரூ.68 கோடியில் உங்களுக்கு சொகுசு பங்களா கேக்குதா? நடிகை ஜோதிகாவை சீண்டிய அர்ஜூன் சம்பத்!!!
Author: Udayachandran RadhaKrishnan20 மார்ச் 2023, 4:01 மணி
பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா. ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் நுழைந்த இவர், கடும் உழைப்பு திறமையால் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கோரிக்கைவிடுத்தது இணையத்தில் வைரலாக பரவியது.
இதன் ஒரு பகுதியாக நடிகர் சூர்யா மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் சொந்த வீடு வாங்கியிருக்கிறாராம். தனது மகளின் மேற்படிப்புக்காக இந்த வீடு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்திகள் பத்திரிகைளில், டிவி சேனல்கிளல் வெளியானது. தற்போது இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ஜோதிகா மேடம் 68 கோடியில் எத்தனை ஏழைகளுக்கு ஆஸ்பத்திரி கட்டி கொடுத்திருக்கலாம் ? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? ஆஸ்பத்திரி வசதி கூட இல்லாம ஏழைகள் விழிபிதுங்கி இருக்கும் போது மும்பைல உங்களுக்கு சொகுசு பங்களா கேக்குதா ? என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2020 ம் ஆண்டின் தொடக்கத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, பெரிய கோயில்களுக்கு டொனேஷன் வழங்குவதை போல் மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் டொனேஷன் வழங்கினால், கோயில்களை போல் அவற்றையும் நன்கு பராமரிக்க முடியும்.
கோயில்களில் கவனம் செலுத்துவதை விட மருத்துவமனைகள் மீது கவனம் செலுத்துவது தான் முக்கியம் என்றார். கோயில்களை பற்றி பேசுகையில் தஞ்சை பெரிய கோயிலை உதாரணம் காட்டி பேசினார்.
ஜோதிகாவின் இந்த பேச்சு அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அர்ஜூன் சம்பத் அதற்கு பதிலடியாக இந்த ட்விட்டை பதிவிட்டுள்ளார். அர்ஜுன் சம்பத்தின் கருத்து ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
0
0