நீர் மேலாண்மையில் முதல் இடத்தில் தமிழகம் : மத்திய அரசின் விருதுகளை வென்ற 4 தமிழக மாவட்டங்கள்!!

7 November 2020, 8:53 pm
CM - water award -- updatenews360
Quick Share

சென்னை: கொரோனாக் கட்டுப்பாட்டிலும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களிலும் முனைப்புகாட்டி தமிழ்நாட்டை விரைவாக முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், மற்றொரு மைல்கல்லாக நீர் மேலாண்மையின் பல்வேறு பிரிவுகளில் இந்தியாவில் முதல் இடம் பெறும் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் வழங்கப்படும் விருதுகளை வேலூர், கரூர், மதுரை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் வென்றுள்ளன.

இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் தமிழகத்திற்கு வந்து சேரும் ஆறுகளை வடக்கிலும், மேற்கிலும் இருக்கும் மாநிலங்கள் தடுத்து வருவதால் தமிழ்நாடு நீர்வளம் குன்றிய மாநிலமாக உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளும், வடக்கில் பாலாறு வடிநிலமும் மணற்பாங்கான சமவெளிகளாக இருப்பதால், பெரிய அளவு அணைகளையும் கட்டமுடியாத நிலை இருக்கிறது. ஐப்பசி தொடங்கி கார்த்திகை மாதங்கள் வரை பொழியும் வடகிழக்குப் பருவமழையையை தமிழகம் பெரிதும் நம்பி இருக்கிறது.

Heavy Rain Alert - Updatenews360

இதனால், தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், இருக்கும் நீரைக்கொண்டு பாசனத்திட்டங்களையும், குடிநீர்த் திட்டங்களையும் நிறைவேற்றி சிறப்பான நீர்மேலாண்மையைக் கையாண்டால்தான் தமிழகத்தின் நீர்த்தேவையை நிறைவுசெய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. தமிழ்நாட்டை ஆண்ட சோழ, பாண்டிய, பல்லவர் மன்னர்களும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால் ஆயிரக்கணக்கான ஏரிகளும், நீர்நிலைகளும் பாசனக்கால்வாய்களும் தமிழகத்தில் அமைக்கப்பட்டன.

இந்திய விடுதலைக்குப் பின் தமிழகத்தில் கடும் மழைப்பொழிவு ஏற்படும் காலங்களில் வெள்ளம்போல் நீர் பெருகுவதும், அது வடிந்தபின் குடிநீருக்கே பஞ்சம் உருவாகும் நிலையும் அடிக்கடி ஏற்பட்டன. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தில் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் இருக்கும் நீரை குடிநீருக்கும், பாசனத்திட்டங்களுக்கும் முறையாகப் பயன்படுத்தும் திட்டங்களை வகுப்பதிலும் நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கிராமங்களில் இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்க பொதுமக்கள் பங்களிப்புடன் குடிமராமத்துத் திட்டத்தை சிறப்பான வகையில் நிறைவேற்றி வருகிறார். பல இடங்களில் காணாமல் போன நீர்நிலைகள் மீண்டும் தோன்றியுள்ளன. அளவில் குறுகி சிறுத்துப்போன நீர்நிலைகள் மீண்டும் பரந்து விரிந்துள்ளன. ஆழம் அதிகரிக்கப்பட்டதால் சேமிக்கப்பட்ட நீரின் அளவும் உயர்ந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு தமிழக மக்களுக்க்குப் பயன்படப்போகும் தொலைநோக்குத் திட்டமாகும்.


மேலும், தமிழகத்தில் இருக்கும் ஆறுகளை இணைப்பதிலும் பழனிசாமி அரசு தீவிரம் காட்டிவருகிறது. அண்மையில் காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டத்தை தமிழக அரசு அறிவித்து நிறைவேற்றிவருகிறது. பல குடிநீர்த் திட்டங்களையும் பாசனத்திட்டங்களையும் நிறைவேற்றிவருகிறது.

metur dam - updatenews360

இந்த நிலையில், நீர் மேலாண்மையில் முதல் இடம் மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்துள்ளது. இதில், நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது.

மத்திய நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில், நீர் மேலாண்மையில் தென் இந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ததில் சிறந்த மாவட்டமாக வேலூர், கரூர் மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன. அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

bhavani-sagar-dam - updatenews360

நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட தென்னிந்திய சமூக செயற்பாட்டாளர்களாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முதல் பரிசையும், அண்ணா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.

சாலைகள், பாலங்கள், பேருந்து நிலையங்கள், புதிய தொழில் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி அடிப்படைத்தேவையான நீர்மேலாண்மையிலும் தமிழகம் சிறப்பான இடத்தில் இருப்பதையே இந்த விருதுகள் காட்டுகின்றன.

Views: - 30

0

0

1 thought on “நீர் மேலாண்மையில் முதல் இடத்தில் தமிழகம் : மத்திய அரசின் விருதுகளை வென்ற 4 தமிழக மாவட்டங்கள்!!

Comments are closed.