வயநாடுக்கு பொம்மை எம்பி தேவையில்லை.. பிரியங்கா குறித்து பாஜக வேட்பாளர் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2024, 12:04 pm

மக்களவை தேர்தலில் வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியை தக்க வைத்து, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து நவம்பர் 13 அங்கு மீண்டும் தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையேய நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி. முன்னதாக ரோடு ஷோ சென்ற ராகுல் காந்தி, பிரியங்க காந்தி மக்கள் மத்தியில் பேசினர்.

அப்பேது பேசிய ராகுல் காந்தி,நாடாளுமன்றத்தில் 2 பிரதிநிதிகள் உள்ள தொகுதியாக இருக்கும், ஒன்று பிரியங்கா அதிகாரப்பூர்வ வயநாடு எம்பியாகவம், நான் அதிகாரப்பூர்மற்ற எம்பியாக இருப்பேன் என கூறினார்.

இதையும் படியுங்க: கொத்தனாரால் கர்ப்பமான சிறுமி.. குழந்தையை பெற்றெடுத்து கொலை செய்ய முயன்ற கொடூரம்!

ராகுலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த வயநாடு பா4க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், கடந்த 5 வருடமாக ராகுல் காந்தி வயநாமு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வயநாடு சுற்றுலா தளமாக உள்ளது, எங்களுக்கு பம்பை எம்பி தேவையில்லை, நிலச்சரிவின் போது பிரதமர் இங்கு மீட்பு பணிகளை கண்காணித்துள்ளார் என கூறினார்.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!