ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் முழு மனதுடன் வரவேற்போம்: எல்.முருகன் பேட்டி

30 November 2020, 10:36 pm
l-murugan-updatenews360
Quick Share

சென்னை: ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் முழு மனதுடன் வரவேற்போம் என்று பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடங்க முடியாததால் வேல் யாத்திரையை ரத்து செய்தோம். மீண்டும் 4-ந்தேதி முதல் வேல் யாத்திரையை தொடங்கி, 7-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்கிறோம். ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மிகவாதி. தேசபக்தர். ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் பா.ஜ.க. அதை முழு மனதுடன் வரவேற்கும்.

சட்டசபையில் இந்த முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிச்சயமாக இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலில் தாமரை மலர்ந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கட்சி தலைமைதான் முறையாக அறிவிக்கும். வேளாண் சட்டத்துக்கு தமிழக விவசாயிகள் மிகப்பெரிய வரவேற்பை தந்து உள்ளனர். வேளாண் சட்டத்தை வைத்து தி.மு.க. பெரிய அளவில் பிரச்சினை செய்ய முயற்சித்தது. ஆனால் பாதுகாப்பான சட்டம் என்று விவசாயிகள் நினைப்பதால் எதிர்கட்சிகளின் பொய் பிரசாரம் முறியடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0