வாரம் ஒரு முறை WEEK OFF.. OVER TIME பார்த்தால் ஊதியம் : காவலர்களுக்கு மன நிம்மதி அளித்த டிஜிபி சைலேந்திரபாபு!!

Author: Udayachandran
30 July 2021, 9:22 pm
Police Week Off -Updatenews360
Quick Share

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கையில், காவலர்களின் உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட வாரம் ஒரு நாள் விடுப்பு தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், வார ஓய்வு தேவைப்படாத காவலர்கள் பணியில் இருந்தால் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சார்பில் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 250

0

0