ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு சீமான் எங்கு போட்டியிட்டால் என்ன? அண்ணாமலை தாக்கு!!

ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு சீமான் எங்கு போட்டியிட்டால் என்ன? அண்ணாமலை தாக்கு!!

கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ம் நாள் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு விழாவில் உரையாற்றினார். பின்னர் நொய்யல் ஆராத்தி வழிபாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு முக்கியமான முடிவை கேபினட் யில் எடுத்துள்ளார்கள். LPG சிலிண்டர் விலை நேரடியாக 200 ரூபாய் குறிக்கப்படும். இது 33 கோடி குடும்பங்களுக்கும் அமல்படுத்தப்படும். இது இன்று ரக்‌ஷா பந்தன் ஓணம் திருநாள். இது அனைத்து மகள் இருக்கும் வரப்பிரசாதமாக அமையும்.

200 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்துவிடும். மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் யாரெல்லாம் சிலிண்டர் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு கடந்த நான்கு ஐந்து மாதங்களாக வழங்கப்பட்டு வந்த 200 ரூபாய், மேலும் ஒரு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. 37 லட்சம் குடும்பத்தினர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றுள்ளனர்.

இதனை நாம் அனைவரும் நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். உலகில் ரஷ்யா உக்கரை போருக்கு பிறகு Natural gas, LPG கேஸ் விலை 200 சதவிகிதம் எல்லாம் ஏறிய போதிலும் கூட, மத்திய அரசு அதனை பெரிய அளவில் ஏறவிடாமல் பார்த்துக் கொண்டார்கள், இருப்பினும் அது சாமானிய மக்களுக்கு சுமையாக இருந்தது. இதனை மக்களும் பலமுறை தெரிவித்து வந்தனர்.

மத்திய அரசு இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அவருக்கு நம் பிரதமர் எப்படி கடந்த தீபாவளியன்று பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்களோ அதே போல் இந்த ரக்‌ஷா பந்தன், ஓணம் திருநாளில் கேஸ் விலையை குறைத்துள்ளார்கள்.

மேலும் வருகின்ற காலங்களில் கேஸ் விலையை மேலும் குறைப்பதற்கு தற்பொழுது உள்ள சப்ளையர்களை தாண்டி வேறு நாட்டில் இருந்து வாங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவையில் ஒரு பக்கம் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, கிட்டத்தட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100% முடிக்கப்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடுத் தொகையும் மக்களுக்கு கொடுக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது. அதே நேரத்தில் விமான நிலையத்தில் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை Code Share உள்ளது.

அம்ருத் ரயில் நிலையங்களை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் விரிவாக்க பணிகள் 25 ஆயிரம் கோடிக்கும் மேல் தேர்ந்தெடுத்து வேலைகள் செய்ய ஆரம்பித்தோம். இந்த அம்ருத் ரயில் நிலையத்தில் கோவை ரயில் நிலையம் இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கான கேள்வியை நாங்கள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் முன் வைக்கும் பொழுது அந்த அதிகாரிகள், ” கோவையில் இருந்து 34 ரயில்களின் புறப்படுகிறது, 96 ரயில்கள் கோவை வழியாக செல்கிறது, கோவையில் புதிதாக ரயிலை இயக்குவதற்கு இடம் கிடையாது” என தெரிவித்தனர்.
அப்படி இருந்தும் நாம் வந்தே பாரத ரயிலை கோவைக்கு இயக்கியுள்ளோம். எனவே கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கோவையை பொருத்தவரை இரண்டு பெரிய ரயில் நிலையங்கள் கிடைக்கும்.

24 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்கின்ற முயற்சியே ஒரு கட்சியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

நாளை மறுநாள் பியூஸ்கோயல் கோவை வருகிறார். அவருடன் தொழில் நிறுவனங்கள் கலந்துரையாட உள்ளனர். மேலும் அன்றைய தினம், இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான கோவையை சேர்ந்த சண்முகம் செட்டியின் திருவுருவ சிலையை திறந்து வைக்க உள்ளார்.

என் மண் என மக்கள் முதல் கட்ட பாதயாத்திரையை பொறுத்தவரை மிகவும் கடுமையாக இருந்தது. குறிப்பாக தென் தமிழகத்தில் 40°க்கும் மேல் அனல் பறக்கக்கூடிய இடங்களில் நடைபெற்றது.

அதே சமயம் மக்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது, அதுமட்டுமின்றி மக்களும் கலந்து கொண்டது எல்லாம் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் அதிகமான பிரச்சனைகளும் தென்தமிழகத்தில் உள்ளது.
குறிப்பாக வேலைவாய்ப்பு தண்ணீர் பிரச்சனை விவசாய வளர்ச்சி ஆகியவை எல்லாம் தென் தமிழகத்தில் பெரும் சவாலாக உள்ளது. அதனால் தான் தென் தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் பொழுதும் அங்குள்ள பிரச்சனைகளுக்கு ஏற்ப மத்திய அமைச்சர்களை அழைத்து வந்தோம். பாதயாத்திரை செல்லும் பொழுது அனைவரும் பிரதமர் நன்றாக செயல்படுகிறார்.

ஆனால் சிலிண்டர் விலையை மற்றும் குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறினார்கள். நானும் அவர்களிடம் பிரதமர் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தேன்.

தென்காசியில் செப்டம்பர் 4ம்தேதி இரண்டாம் கட்ட பாதயாத்திரை துவங்கி 19ஆம் தேதி கோவைக்கு வந்து விடுவோம், இங்கேயும் பல்வேறு மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறோம். நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு ஒரு பவர் மாநில அரசுக்கு ஒரு பவர் என்றுதான் உள்ளது.

ஆனால் இங்கு ஒரு மாநில அரசு தன்னிச்சையாக தண்ணீர் வழங்க மாட்டேன் என்று கூறும் பொழுது அது அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி தான்.

கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் புதிதானவர்கள் அல்ல. காவிரி நீர் பிரச்சினையைப் பொறுத்தவரை இவர்கள் ஏதோ சிறு பிள்ளைகள் வந்து அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன் காவிரி நீர் மேலாண்மையை மதிக்க மாட்டேன் என்று சொல்வது போல் உள்ளது.

உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், என்று கூறிவிட்டால் இப்பொழுது கர்நாடகா என்ன சொல்வோம்?. இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே கர்நாடகா அரசு கேள்விக்குறியாக்குகிறது. கர்நாடகாவிற்கும் இரண்டு மூன்று மாநிலங்களில் இருந்து தண்ணீர் உள்ளே வருகிறது அந்த மாநிலங்களும் கர்நாடகாவிற்கு இது போன்று கூறிவிட்டால் என்ன செய்வார்கள்?.

தமிழகத்தில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை புரிந்து கொண்டு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொல்ல வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று அன்று பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார், அப்போது தமிழக பாஜகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் இருந்து மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று தெரிவித்தோம். அப்போது மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று காவிரி நீர் மேலாண்மை கூறியது. அதனை பாஜக ஏற்றுக் கொண்டது.

வட மாநிலத்தில் இருந்து யாராவது தமிழகத்திற்கு வந்தால் அவர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும், 15 லட்சத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளர்கள் இங்க இருப்பதாக மாநில அரசு புள்ளி விபரங்கள் கூறுகிறது.

மத்திய அரசை பொருத்தவரை ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு என்பதை கூறுகிறது, இதனால் ஒருவர் எங்கிருந்தாலும் ரேசன் பொருட்களை பெற்று கொள்ள முடியும். இதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் தவறாக புரிந்து கொண்டு விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள்.

அதேபோல் கல்வியை பொறுத்தவரை வீடு தேடி கல்வி என்பதை மத்திய அரசு கொரோனா காலத்தில் கொண்டு வந்தது. இதனை மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொது விழிப்புணர்வு அனைவரிடத்திலும் உள்ளது.

10 லட்சத்து 76 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு வந்துள்ளது என்று நான் ஒரு புள்ளிவிவரத்தை பாதயாத்திரைக்கு முன்பு கொடுத்து இருந்தேன். ஆனால் தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்தால் முதல்வரும் மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுத்தது என்று அறிவிக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளாகட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆகட்டும் அம்ருத் திட்டங்கள் ஆகட்டும் எதை எடுத்துக் கொண்டாலும் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காதது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

10 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கான புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக இன்னும் 24 மணி நேரத்தில் பாஜக கட்சி வெளியிடும். முதலமைச்சர் பேசுவதில் அதிகமாக பொய் உள்ளது.

முதலமைச்சர் எதைப் பேசுவதற்கு முன்பும் ஒரு முறை கிராஸ் செக் செய்ய வேண்டும் அல்லது உடன் இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்த பேச்சை வெட்டு செய்ய வேண்டும். ஒரு அரசியல் பேசுவதற்காக எதை எதையோ பேசி முதல்வர் சிக்கலில் சிக்க போகிறார்.

திமுக வந்த பிறகு பொய் அதிகமாக பேச துவங்கி விட்டார்கள். ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. நாங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடும் வெள்ளை அறிக்கை அதிகாரிகளிடமும் கொடுத்து அந்த அறிக்கை பொய் என்று சொல்லட்டும் மேற்கொண்டு பார்த்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறும் சாலை என்று பார்த்தால் கோவை-கரூர் சாலை தான். எனவே விரைந்து சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்று நானே நேரடியாக இரண்டு முறை மத்திய அமைச்சரை சந்தித்து இருக்கிறேன்.

தற்பொழுது நிலம் கையகப்படுத்துவது தான் பிரச்சனையாக உள்ளது. இரண்டு முறை இந்த அரசு அந்த நிலம் கையகப்படுத்தும் Format யை மாற்றியது. இதே கோவையை சேர்ந்த எம்பி திட்டம் வரக்கூடாது என்று போராட்டமும் மேற்கொண்டார். தமிழக அரசியலுக்காக அதிகாரிகளை நியமித்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதபடுத்த வேண்டும்.
திமுக ஊழல் பட்டியலை பொருத்தவரை ஒரு முறை நேரடியாக வழங்கினோம் அடுத்த கவர்னரிடம் வழங்கிவிட்டு முக்கியமானவற்றை வெளியிட்டோம். அடுத்த முறை CBI விசாரணை கூட கேட்கலாம். DVAC நாங்கள் அளித்த 6 புகார்களை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு அப்படியே வைத்துள்ளார்கள்.

PGR ஐ பற்றி நாங்கள் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கிறோம். இன்று மாநில அரசும் வந்த காண்ட்ராக்ட் வேண்டாம் என்று கூறுகிறார்கள். பாஜக, திமுக கட்சியின் மீது மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது என்று குற்றம் சாட்டும் சீமான் அவரே அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடட்டுமே… நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம் அதில் குற்றம் குறைகள் சொல்லலாம் ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா என்பது தான் எங்களுடைய கேள்வி.

ISRO வை நேரு தான் ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியினர் பேசுகிறார்கள், நான் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை அனைத்து தலைவர்களும் நாட்டிற்கு தேவைதான்.

மோடி அரசை பொருத்தவரை எந்த துறைக்கு நிதி ஆதரவு கொடுக்க வேண்டுமோ அந்தத் துறைக்கு நாம் வழங்குகிறோம். ISRO விற்கு கடந்த 9 ஆண்டுகளில் 442 தனியார் சேட்டிலைட்டுகள் அனுப்பி உள்ளோம். அதில் 389 யை ISRO அனுப்பி உள்ளது. ISROவின் நிதி ஆதரவை மோடி உயர்த்தி உள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 70000 கோடி பெட்ரோல் சப்சடி இருந்தது. நம்முடைய அரசை பொருத்தவரை சப்சடி எங்கு தேவைப்படுகிறதோ அங்குதான் அளிக்கிறோம். சப்சடியை பொறுத்தவரை காங்கிரஸ் பார்வை வேறு பாஜக பார்வை வேறு. 2022ம் ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் மோடி 2023 டிசம்பர் மாதம் முடியும் பொழுது பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்று கூறினார்.

தற்பொழுது வரை 5,50,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே தற்பொழுது வரை தூங்கி விட்டு வேலை வாய்ப்பு என்பது ஒரு டிராமா என்று தற்பொழுது ட்விட் பதிவிடுகிறார். சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். அவர் வாயுள்ளது பேசுகிறார்.

எந்த ஊருக்கு போகிறோம் என்று வழி தெரிந்தால் கடினம் ஆனால் எந்த ஊருக்கு போகிறோம் என்பதே தெரியவில்லை என்றால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் தானே, சீமான் மீது எனக்கு மதிப்புள்ளது. ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன?.
மோடி வாரணாசியில் போட்டியிட்டு அதனை அடிப்படையில் இருந்து மாற்றி விட்டார். ராமநாதபுரத்தை பொறுத்தவரை இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றாக உள்ளது.

அதே போல தான் விருதுநகரும் உள்ளது. எனவே பிரதமருங்க நிற்க வேண்டுமென்று மக்கள் விருப்பப்படுகிறார்கள். திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே, பிரதமர் என்ன ஊழல் செய்தார்?.

சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

2 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

3 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

3 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

4 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

5 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

6 hours ago

This website uses cookies.