ரவை உள்பட 13 வகை மளிகைப் பொருட்கள் : ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் அடுத்த ஆஃபர்..!!!

13 May 2021, 8:00 pm
ration shop - updatenews360
Quick Share

கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகைப் பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 14 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு, எஞ்சிய அனைத்தும் முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

TN Secretariat - Updatenews360

இதனிடையே, மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதன் முதல் தவணை தொகை வரும் 16ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.

இதனிடையே, கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகைப் பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 2.11 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், கோதுமை, ரவை, உப்பு, பருப்பு உள்ளிட்ட 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 793

1

0