மரத்துக்கும் மட்டும் கிளைகள் இருக்கும் போது… இந்து மதத்திற்கும் இருக்கக்கூடாதா? பாரதியாரை சுட்டிக்காடிய பாஜக!!!
சனாதன தர்மம் தொடர்பான விவாதங்கள் தற்போது ஓய்ந்து இருக்கும் நிலையில், பாரதியார் 1909 ஆம் ஆண்டில் சனாதனம் குறித்து எழுதியதாக ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், “சனாதன தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும், கிளைகளும் சூரிய ஜோதியிலே காணப்படும் ஏழுவகை வர்ணங்களைப்போல அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களாகுமேயல்லாமல், குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமது அழிவுக்கு கருவிகளாக மாட்டா.
அடடா! இந்த ஹிந்துக்களிலே வைஷ்ணவன், சைவன், அத்துவைதி, சாக்தன் முதலிய எத்தனை கிளைகள்! இவர்கள் எப்படி விளங்கப் போகிறார்கள்? என்று கூறி சிரிப்பவர்கள் நமது தேச சரித்திர மட்டுமேயன்றி வேறெந்த நாட்டு சரித்திரமும் அறியாதவர்கள். இவர்கள் சனாதன தர்மத்தின் இயல்பை மட்டுமேயன்றி வேறெந்த மதத்தின் இயல்பையும் அறியாதவர்கள்.
மனித அறிவானால் ஆச்ரயிக்கப்பட்டுவரும் எந்த மார்க்கத்திலும் ஆயிரக்கணக்கான கிளைகள் இருத்தல் அத்யாவசியம் என்ற சாதாரண உண்மை இந்த குழந்தைகளுக்கு தெரியாது. உயிர்த்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல கிளையுடைமை ஒரு லட்சணம்.
உயிரடனிருக்கும் ஒரு மனிதனுக்குப் பலவகைப்பட்ட அவயவங்கள் இருந்து பலவகைத் தொழில்கள் நடத்துவதை பார்த்து இக்குழந்தைகள் யோசனை செய்யவில்லை. உயிருடன் இருக்கும் ஒரு மரத்திற்குப் பல மலர்களும், கிளைகளும், கொம்புகளும் இருப்பதைக் கண்டு இவர்கள் சிந்தனை செய்தது கிடையாது.
வெட்டுண்டு கிடக்கும் செத்த மரக்கட்டை தான் எப்போதும் ஒரே ரூபமுள்ளதாய், பல கிளைகளற்றதாய் இருக்கும். அந்த மரக்கட்டை போல நமது பாரத ஜாதியும், சனாதன தர்மம் ஆகி விடவில்லையென்று விசனமடைவோரைப் பார்க்கும் போது, சங்கீத வித்வானைப் பார்த்து அழத் தொடங்கிய ஆட்டிடையன் கதை ஞாபகத்திற்கு வருகின்றது.
பௌத்தம், கிருஸ்துவம் முதலிய யாதேனும் ஓர் மார்கத்தைப் பற்றிய பழக்கம் இருந்தால் இவர்கள் நமது சனாதன தர்மத்தில் கிளைகள் இருப்பது பற்றி குறை சொல்ல வரமாட்டார்கள். ஐயோ! சனாதன கர்பத்திலே பல வகுப்புகள் இருப்பதாகச் சொல்லி நிந்தனை செய்ய வரும் இவர்கள், அந்த வகுப்புகளின் யதார்த்த ரூபத்தையும், குணத்தையும், தொழிலையும் பற்றி ஒரு க்ஷணமேனும் ஆலோசனை செய்திருக்கிறார்களா?
சக்தி மார்க்கம், கிருஷ்ண பத்தி, சிவயோகம், பிரம்மானுபவம் என்பனவற்றில் எதைக் கொய்தெறிந்து விடலாமென்று இவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்? அழகிய ஜீவ விருக்ஷத்திலே பசுமை வாய்ந்த இலைகளையா? இனிய தோற்றமுடைய நறுமலர்களையா? கனிகளையா? எந்த பகுதியை நாசம் செய்ய சொல்லுகிறார்கள்? சனாதன தர்மம் ஒன்று. பரஸ்பர சஹோதரத்துவமுடைய பல கிளைகள் கொண்ட ஒரு பொருள்.
நம்முள்ளே பொது நலத்திற்கு விரோதமான வேற்றுமைகளை அவரவர்கள் கண்டா இடத்தில் நீக்கிக் கொள்ள வேண்டுமேயல்லாது நமது பொது நாள்ச செய்திகளைக் காட்டிலும் வேற்றுமைச் செய்திகள் வெகு முக்கியம் போல பின்னவற்றையே பிரமாதமாக முரசொலியுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கலாகாது.
புதுவை “இந்தியா”, 1909 ம் ஆண்டு, செப்டம்பர் 4 இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார். 124 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பாரதியாரின் சிந்தனைகள் இன்றைக்கும் சிலருக்கு அறிவுரையாக பயன்படுகிறது. என்று குறிப்பிட்டு உள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.