‘எங்கள நடுத்தெருவுல விட்டுட்டீங்களே நாங்க எங்க போவோம்?’ : வீடுகளை அகற்றிய போலீஸ்…கெஞ்சிக் கதறிய மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 6:20 pm
House Demolish - Updatenews360
Quick Share

சென்னையில் விவிஐபி ஏரியாவாக உள்ளது சென்னை கிரீன்வேஸ் சாலை. முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், நீதிபதிகள் என பொது வாழ்வில் உள்ள பிரபலங்கள் வசிக்கும் பகுதி இது.

இப்படிப்பட்ட கிரீன்வேஸ் சாலை அருகே உள்ளது இளங்கோ தெரு. கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து காவல்துறை, வருவாய்துறையினர் அப்பகுதியில் ஜேசிபி இயந்திரத்துடன் குவிந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வீடுகளை அகற்றுவதற்கான முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அப்பகுதி மக்கள் அறிவிப்பு ஏதும் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வீடுகளை இடிக்க துவங்கும் போது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை காக்க அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் பொதுமக்கள் குவியத் தொடங்கினர். அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூடுதல் போலீசாரை வரவழைக்கப்பட்டு குவியத் தொடங்கினர்.

இதையடுத்து போலீசாருடன் பேசிய மக்கள், ஏராளமான மாணவர்கள், தொழில் செய்வோர் உள்ளதால் உடனடியாக காலி பண்ண சொன்னால், நாங்கள் எங்கே போவது என கேள்வி எழுப்பினர்.

காவல்துறையிடம் கெஞ்சியும் வாக்குவாதம் செய்த மக்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நேரம் ஆக ஆக, வீடுகளை அகற்ற விடாமல் தடுக்கும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

மேலும் நீதிமன்ற உத்தரவு இருந்தாலும், எங்களுக்கு மாற்று இடங்கள் கொடுக்க வேண்டும், அது மட்டுமல்லாமல் பெரும்பாக்கம் பகுதியில் மாற்று இடங்கள் கொடுத்தால், தொழில் செய்வோர் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் கெஞ்சி கதறிய காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Views: - 592

0

0