எந்தெந்த ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை கிடைக்கும்..? அமைச்சர் பிடிஆர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Author: Babu Lakshmanan
13 August 2021, 1:02 pm
ration card - cash - updatenews360
Quick Share

குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 ஊக்கத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. இதையடுத்து, திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், குடும்பத் தலைவியாக பெண்கள் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே அரசு அறிவித்த ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியானது.

ஊக்கத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை தமிழக அரசு தெளிவாகக் கூறாத நிலையில், ரேஷன் அட்டைகளில் பெண்களின் புகைப்படத்தை மாற்றும் பணிகளில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 ஊக்கத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது :- குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே உரிமைத் திட்டம் என்பது தவறான தகவலாகும். குடும்பத் தலைவியாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை என்று தவறாக கருதி, ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவர்களின் பெயர்கை மாற்றுகின்றனர்.

பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவர்களை மாற்ற வேண்டியது இல்லை. பெண்கள் உரிமைத் தொகை திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கானதாகும். பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தை பணக்காரர்களுக்கும், சம்பளம் வாங்குபவர்களுக்கும் வழங்க கூடாது என விமர்சனங்கள் எழுந்தன. ஏழைப் பெண்களுக்கு உரிமைத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

Views: - 525

0

0