வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வந்தாலும்… கட்டாயம் : சென்னை மாநகராட்சி அதிரடி ஆணை!!

19 August 2020, 4:38 pm
Chennai corporation - updatenews360
Quick Share

சென்னை : வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களையும் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறையில், கடந்த 17ம் தேதி முதல் தளர்வுகள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதாவது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி வருபவர்களை பரிசோதனை செய்வதில்லை என்ற புகார் எழுந்தது.

இந்த நிலையில், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களையும் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது :- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள், கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல், பரிசோதனைகளை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். சென்னையில் அண்மை காலமாக தொற்று பரவல் குறைந்துள்ளது.

மக்களின் அவசரத் தேவைகளுக்கான இ-பாஸ் வழங்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. தகுந்த காரணங்கள் இருப்பின் உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், இனி வரும் காலங்களில் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நேற்று ஒரே நாளில் 18,853 மனுக்கள் பெறப்பட்டு அதில் 18,823 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வரும் நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, அந்தந்த மண்டல அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 32

0

0