டாஸ்மாக் செல்பவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு

Author: Babu Lakshmanan
28 November 2021, 2:29 pm
Minister Subramanian -Updatenews360
Quick Share

சென்னை : டாஸ்மாக் கடைக்குச் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வரும் நிலையிலும், பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, கடந்த ஜன.,16ம் தேதி முதல் சிறப்பு மெகா முகாம்களை அமைத்து, தடுப்பூசிகளை போட்டு வருகிறது.

100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன.

இதனிடையே, இன்று 12வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இதுவரை முதல் தவணையை 76 சதவீதம் பேரும், 2-வது தவணையை 40 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

சென்னை அடையாறு மேம்பாலம் அருகே மலர் மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் பொன்முடி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- உலக அளவில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், என அவர் கூறினார்.

Views: - 197

0

0