யார் இந்த உதயநிதி? சிறைக்கு சென்றாரா? போராட்டம் நடத்துனாரா? 5 வருடத்திற்கு முன் என்ன பண்ணாரு தெரியுமா : சிவி சண்முகம் எம்பி கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 9:01 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டது வெட்கக்கேடாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியில் அதிமுகவின் சார்பில் திமுக அரசை கண்டித்தும் பால் விலை உயர்வு மின்சார கட்டண உயர்வு விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய சிவி சண்முகம், தமிழ்நாடு மக்கள் உங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் பசங்களை ரூமில் தனியாக இருக்க விடாதீர்கள் ஏனென்றால் இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஒன்றை ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

அதுவும் பள்ளி கல்லூரி கஞ்சா அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி அபின் ஊசி வந்து கொண்டிருக்கிறது. மேலும் ராமேஸ்வரம் பகுதியில் 301 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே தயவு செய்து தாய்மார்கள் பெரியவர்கள் உங்கள் குழந்தைகளை முறையாக கண்காணியுங்கள்.

பள்ளி, கல்லூரிக்கு அருகே ஏதாவது உங்களுக்கு சந்தேகப்பட்ட நபர்கள் இருந்தால் உங்களால் பிடித்து தர முடியவில்லை என்றால் முறையாக யாருக்கு தகவல் தெரிவிக்கப்படுமோ தெரிவியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

மேலும் குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் திமுகவினர்.
உதயநிதி என்ன செய்து இருக்கிறார், இந்த நாட்டுக்கு மக்களை விடுங்கள் திமுகவிற்கு என்ன செய்திருக்கிறார்.

இவர் சிறைக்கு சென்றிருக்கிறாரா போராட்டத்தில் கலந்து இருக்கிறாரா? யார் இந்த உதயநிதி? ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக நடிகைகளுக்கு பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவர்.

இந்த உதயநிதி நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றவர் இந்த உதயநிதி.

இன்றைக்கு தமிழ்நாட்டோட அமைச்சர் வெட்கமாக இருக்கிறது இதுதான் சுயமரியாதை இயக்கமா திமுக சுயமரியாதை இப்பொழுது உதயநிதி காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய உரத்தை மத்திய அரசாங்கம் கொடுக்கின்ற மானியத்தில் வாங்கி தமிழ்நாடு அரசு தனியார் கடைகளுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

மின்சார கட்டண உயர்வு பால் கட்டண உயர்வு 12 ரூபாய் இந்த அரசு உயர்த்தி இருக்கிறது ஆக இந்த அரசு பொறுப்பேற்று மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்று பேசி முடித்தார்.

Views: - 306

0

0