அதிமுக பாஜக கூட்டணி தொடருமா..? மீண்டும் நெருப்பை பற்ற வைத்த பாஜக பிரமுகர் சி.டி ரவி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 4:54 pm
Admk CT Ravi - Updatenews360
Quick Share

அதிமுக – பாஜக இடையே சிறு சலசலப்பு நிலவி வருகிறது. அதிமுகவில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் அண்ணாமலையின் சமீபத்திய பேச்சு ஒன்று அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பாஜக கூண்டை விட்டு பறக்க தயாராகிவிட்டதாகவும், தமிழகத்தில் அரசியல் களம் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியான பாதையில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.

தமிழகத்திற்கு அண்ணாமலை செய்யும் அரசியல்தான் சரியானது. அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியிருப்பது பாஜகவுக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

அண்ணாமலையின் இதுபோன்ற கருத்துகளை கூறினால் மட்டுமே அதிமுகவினர், பாஜகவுடன் கூட்டணி வைக்க முன்வருவார்கள். ஏனெனில் அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Views: - 81

0

0