செல்வப்பெருந்தகை பதவி பறிக்கப்படுமா? ஆம்ஸ்டிராங் கொலையில் தொடர்பு? ராகுலுக்கு போன பரபரப்பு கடிதம்.!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 11:35 am

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எழுதி உள்ள கடிதத்தில், “பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்.
புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்.

அவரை இந்தக் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை எனவும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக செல்வப்பெருந்தகை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை பற்றி கூறுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் பல கோணங்களில் தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக போலீசார் ஸ்காட்லாந்துக்கு இணையான காவல் துறை என பெயர் பெற்றவர்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறை கோட்டை விட மாட்டார்கள். உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!