அங்கீகாரமில்லாத பள்ளிகளை மூட உடனே நடவடிக்கை எடுங்கள் : தமிழக அரசு அதிரடி உத்தரவு

10 June 2021, 5:46 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : அங்கீகாரமில்லாத தொடக்கப் பள்ளிகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் தற்போது ஆன்லைன் மூலமே பள்ளிகள் கல்வியை கற்பித்து வருகின்றன. இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகளை மூட மாவட்ட கல்வி அலுவலருக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உரிய விதிகளை கடைபிடிக்காத அங்கீகாரமற்ற பள்ளிகளை மூடவும், அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, அங்கீகாரமற்ற பள்ளிகளின் விபரங்களை சேகரித்து அறிக்கை சமர்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Views: - 78

0

0

Leave a Reply