விமானங்களில் 75 சதவீத பயணிகள் பயணிக்கலாம்: விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி…!!

6 November 2020, 2:04 pm
indian_airlines_Updatenews360
Quick Share

பண்டிகை காலங்கள் வருவதையொட்டி, விமானங்களில் 75 சதவீத பயணிகள் பயணிக்கலாம் என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை, கடந்த மே மாதம் முதல் அனுமதியளிக்கப்பட்டு 60 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், விமானங்களில், 75 சதவீதம் வரை பயணிகள் பயணிப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி வரை மட்டுமே இந்த உத்தரவு தொடரும் எனவும் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

Views: - 17

0

0