‘நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படாது’: அறிவிப்பை திரும்ப பெற்றது தமிழக அரசு..!!
Author: Aarthi Sivakumar15 November 2021, 6:05 pm
நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்து உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி பெற்ற நிறுவனங்கள் வெளியேறின.
இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனைப் பயன்படுத்தி திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளியை சிறு குறுந் தொழில்கள் நிறுவனம் கோரியிருந்தது.
இந்நிலையில், நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நாளை நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் திரும்பப்பெற்றுள்ளது.
0
0