இளம்பெண்ணை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி … தப்பியோடிய நபரை மடக்கி பிடித்த போலீசார்… அதிர்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ…!!

Author: Babu Lakshmanan
6 May 2022, 10:04 am
Quick Share

டெல்லி : டெல்லியில் இளம்பெண் ஒருவர் மீது காரை ஏற்றிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாடகைக் காரை புக் செய்து, அதில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார். அவரது கார் அமர் காலனியை நெருங்கிய போது, சாலையில் வழிவிடுவது தொடர்பாக இரு கார் ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்தது. இருவரும் சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

இதில், பலேனியோ காரை ஓட்டி வந்த உதய்வீர் சிங் என்பவர் மற்றொரு ஓட்டுநரை தரக்குறைவாக பேசி வந்தார். இதனைக் கண்ட அந்த இளம்பெண், காரில் இருந்து இறங்கிச் சென்று, ஓட்டுநரை இப்படி பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், இதனைப் பொருட்படுத்தாத உதய்வீர் சிங், அந்த இளம்பெண்ணையும் சரமாரியாக திட்டியுள்ளார். அந்த சமயம் உதயவீர் சிங்கின் நண்பரும் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

அதன் பின்னர், அந்த பெண்ணை இருவரும் தாக்கியுள்ளனர். இருவரையும் பிடிக்க அந்த பெண் முயற்சித்த போது, பெண்ணை கீழே தள்ளி அவர் மீது காரை ஏற்றி இருவரும் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற உதய்வீர் சிங்கை கைது செய்த போலீசார், அவரது நண்பரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தில் அலட்சியமாக கையாண்டு அப்பகுதியைச் சேர்ந்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Views: - 787

0

0