குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை : தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி கைது!!

13 July 2020, 2:08 pm
DMK updatenews360
Quick Share

செங்கல்பட்டு : இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து, அதனை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் நைனார் குளத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இளம்வயது பெண்ணான இவர், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்த அவரை, தொடர்ந்து கண்காணித்து வந்த திமுகவின் இளைஞரணி செயலாளர் தேவேந்திரன், தனது சகோதரன் புரஷோத்தமனுடன் சேர்ந்து, தக்க சமயம் பார்த்து சசிகலாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இந்த கொடூரமான சம்பவத்தை ஈவு இரக்கமற்ற சகோதரர்கள் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர், தங்களுக்கு தோனும் போதெல்லாம், தங்களின் காம இச்சைக்கு இணங்க வேண்டும் என்று தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். ஆனால், இதற்கு மறுப்பு சசிகலா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரன் புரஷோத்தமன், சசிகலாவை, அவரது வீட்டிற்கே சென்று, அவரது ஆபாச படத்தை காட்டி மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அவர் வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், இளம்பெண் சசிகலாவை, தேவேந்திரனும் அவரது சகோதரன் புரஷோத்தமனும் அடித்து கொலை செய்துவிட்டு, இதனை தற்கொலை என நாடமாக்க, வீட்டிலேயே சடலத்தை தூக்கில் தொங்க விட்டதாக சசிகலாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திமுக நிர்வாகி தேவேந்திரனை கைது செய்ய முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில், இளம்பெண் சசிகலா மரணத்திற்கு காரணமாக திமுக நிர்வாகி தேவேந்திரனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.