தி.மு.க. நிர்வாகிகளால் அடுத்தடுத்து சீரழியும் பெண்கள் : டுவிட்டரில் டிரெண்டாகும் #காமவெறி தி.மு.க.!!

11 September 2020, 4:35 pm
kamaveri dmk- updatenews360
Quick Share

திண்டுக்கல் : மைனர் பெண்ணின் செல்போனிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காமவெறி தி.மு.க என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அண்மை காலமாக சிறுமிகள் முதல் திருமணமான பெண்கள் வரையில் பாலியல் பலாத்காரச் செயல்களுக்கு ஆளாகி வருவது தமிழகத்தில் தலைப்புச் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன. அதிலும், மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு, இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்தான் அதிகம் தென்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் அஜித், 7 வயது பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், தன்னுடைய புகைப்படத்துடன், அந்த சிறுமியின் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

thirupathur dmk arrest - updatenews360

விசாரணையில், திமுக நிர்வாகியான அஜித், ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக மாணவரணி நிர்வாகியான சங்கர், தன்னிடம் ஹாக்கி பயிற்சி பெற வந்த 15 மற்றும் 14 வயதுள்ள சகோதரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே, செங்கல்பட்டுவில் குளிப்பதை வீடியோ எடுத்து, பலமுறை பாலியல் தொந்தரவுக்கு தி.மு.க. நிர்வாகி தேவேந்திரனும்,அவரது சகோதரரும் உள்ளாக்கியதால் சசிகலா என்ற இளம்பெண் தூக்குபோட்டு சம்பவம் தமிழகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நபரை கட்சியை விட்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நீக்கம் செய்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மைனர் பெண்களுக்கு திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் திமுகவிற்கு மேலும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் செய்பவரை கட்சியில் இருந்து நீக்கினால் போதுமா..? இனி இதுபோன்ற குற்றங்களில் கட்சியினர் ஈடுபடக் கூடாது என்பதில் கண்டிப்பான கட்டளைகளையும், உத்தரவுகளையும் திமுக தலைவர் ஸ்டாலின் விடுக்காதது ஏன்..? என்ற கேள்வியே எழுந்து வருகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நிர்வாகிகளின் இந்த செயல்கள் திமுகவின் தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திமுகவினரின் இந்த காம லீலைகளை கண்டிக்கும் விதமாக, டுவிட்டரில் #காமவெறி திமுக என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Views: - 2

0

0