ஈவிகேஎஸ் வெற்றி செல்லாதா? செக் வைத்த நீதிமன்றம் : தேர்தல் ஆணையத்திற்கு பரபர நோட்டீஸ்!!!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த திருமகன் ஈவேரா மரணமடைந்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளின்படி திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரம் செய்ததில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தன என அவர் குற்றம்சாட்டினார்.
ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்தனர். மேலும் தேர்தல் ஆணையம் விதித்துள்ள வரம்பை மீறி அதிக பணத்தை பிரச்சாரத்திற்காக செலவழித்துள்ளனர்.
எனவே, ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இது தொடர்பாக தேர்தல் ஆணையம், ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.