ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த தொழிலாளி…கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்: கோவையில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
30 March 2022, 9:24 am
Quick Share

கோவை: ரத்தினபுரி அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வரமறுத்ததால் 52 வயது தொழிலாளியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் டாஸ்மாக் அருகே மது அருந்திவிட்டு இருந்த போது, கண்ணப்பநகரை சேர்ந்த ஸ்ரீவிஷ்ணு என்ற இளைஞரும் மது போதையில் அங்கு வந்து பழனிச்சாமியுடன் பேசி உள்ளார்.

அப்போது, ஸ்ரீவிஷ்ணு பழனிச்சாமியை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கு பழனிச்சாமி மறுத்ததால் அவரை ஸ்ரீவிஷ்ணு கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ விஷ்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓரினச்சேர்க்கை இணங்க மறுத்த தொழிலாளியை இளைஞர் கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 735

0

0