திமுக எம்.பி.யின் ஆலையில் தொழிலாளி மர்மச்சாவு: கைது செய்யக்கோரி சாலைமறியல்..ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ArrestCuddaloreMPRamesh..!!

Author: Aarthi Sivakumar
20 September 2021, 5:24 pm
Quick Share

கடலூர்: திமுக எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

Image

தினமும் காலை 8 மணிக்கு பணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் கோவிந்தராசு நேற்றிரவு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னையில் பணியாற்றும் அவரது மகன் செந்தில் வேல் என்பவரை, கோவிந்தராசுவின் செல்போனில் இருந்து எம்.பி.ரமேஷின் உதவியாளர் தொடர்பு ‘உனது தந்தை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்..உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Image

அதைத் தொடர்ந்து கோவிந்தராசுவின் குடும்பத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, அவரது உடல் முழுவதும் காயங்களும், இரத்தக் கரைகளும் இருந்துள்ளது. மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டவரின் கண்ணிலும், உடலிலும் எப்படி ரத்த காயங்கள் ஏற்படும் என உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், இரவு 8 மணிக்கு வீடு திரும்ப வேண்டியவர், இறந்துவிட்டதாக அதிகாலை 2 மணிக்கு சொல்ல வேண்டிய நோக்கம் என்ன என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இது குறித்து முந்திரி ஆலையில் பணியாற்றும் சிலரிடம் விசாரித்த போது மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. இரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து கோவிந்தராசுவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து, கோவிந்தராசுவின் மரணம் தொடர்பாக, காடாம்புலியூர் காவல் நிலையத்தில், டி.வி.ஆர் ரமேஷ் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவிந்தராசுவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென உறவினர் கோரிக்கை விடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழகத்தில் போஸ்மார்டம் செய்தால் ஆளும் கட்சியின் தலையீடு இருக்கும் ஆகையால் வேற்று மாநிலத்தின் மருத்துவ குழு போஸ்மார்டம் செய்ய வேண்டும்.. அனைத்தையும் வீடியோ எடுக்க வேண்டும்.


கடலூர் MP TRV.S.Rameshயை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

Image

கூலித்தொழிலாளி மரணத்திற்கு பாமக நிறுவனம் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் எதிரிகளை தப்பிக்க வைக்க செய்யப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக எம்.பி. TRVS ரமேஷை கைது செய்யக்கோரி ட்விட்டரில் #JusticeForGovindaraj #ArrestCuddaloreMPRamesh போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

Views: - 161

0

0