எழுத்தாளர் கி.ரா-வின் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!!

18 May 2021, 10:46 am
corona vaccine cm- Updatenews360
Quick Share

சென்னை: சாகித்திய அகாடமி விருது பெற்ற ராஜநாராயணனின் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று மாலை கருவெடிக்குப்பம் இடுகாட்டில் இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற ராஜநாராயணனின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்,அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 109

0

0