கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!!

6 July 2021, 9:25 am
Quick Share

மூணாறு: கேரளாவில் இன்று முதல் நாளை மறு நாள் வரை ஆறு மாவட்டங்களில் பலத்த மழைக்கான முன்னெச்சரிக்கை ‘மஞ்சள் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 3ல் துவங்கியபோதும் பல்வேறு பகுதிகளில் மழை வலுவடையவில்லை. நேற்று இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டது.

அதேபோல் இன்று முதல் நாளை மறுநாள் வரை இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் பலத்த மழையும் 30 முதல் 40 கி.மீ., வரை காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Views: - 67

0

0