மருத்துவர் சொன்னதை செய்த இளைஞருக்கு முடிகொட்டியதால் அதிர்ச்சி… திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தி ; கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

Author: Babu Lakshmanan
8 November 2022, 9:30 am
Quick Share

திருவனந்தபுரம் ; மருத்துவர் கொடுத்த மருந்தை உட்கொண்டதால் புருவம், தாடி மற்றும் தலை முடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (29). இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். தலைமுடி பிரச்சனையில் இருந்து வந்த அவர், கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுடி பிரச்சனைக்கு பிரசாந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருப்பினும் அவருக்கு தலைமுடி பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

இதனால், அவர் பலமுறை மருத்துவரிடம் முறையிட்ட நிலையில், சில மாத்திரைகளை மருத்துவரும் கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பிரசாந்த் அதிர்ச்சியடைந்தார். மாத்திரை சாப்பிட்ட பிறகு கண் புருவம், தாடி மற்றும் மூக்கில் இருந்த முடி கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவரது திருமணத்துக்கு பெண் பார்க்க்கும் திட்டமும் முடங்கியது.

அதுமட்டுமில்லாமல், தலைமுடி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமலும் , நண்பர்களை சந்திப்பதையும் புறக்கணித்து வந்துள்ளார். இந்த நிலையில், தலைமுடி பிரச்சனை காரணமாக திருமணத்துக்கு தடை ஏற்படுவதாக நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், இவரது தற்கொலைக்கு தலைமுடி பிரச்சனைக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரசாந்த் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Views: - 146

0

0