போதை சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்த ஜாபர் சாதிக் திமுகவுடன் கூட்டுச் சதி.. CM ஸ்டாலின் பதில் சொல்ல அண்ணாமலை கிடுக்குப்பிடி!
டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை, மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். சென்னையை சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜிபுர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ போதையூட்டும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என தகவல் வெளியானது. இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து திமுக மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாபர் சாதிக் ஏற்கனவே 2013ஆம் ஆண்டு போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இது குறித்து தனது X தளப்பக்கத்தில் அவர், திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், ஒரு பிரபல குற்றவாளி என்பதும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என்பதும் தற்போது அனைவரும் அறிந்த உண்மையாகியிருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, 38.687 கிலோ கேட்டமின் (போதைப் பொருள் பயன்பாட்டுக்காக) மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் மற்றும் சிலர், போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இடம்பெற்ற ஜூகோ ஓவர்சீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜாபர் சாதிக் மற்றும் ஒரு பிரபல நபர், தமிழகத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜாபர் போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்டதையும், 2019 ஆண்டு, போதைப்பொருள் கடத்தி, கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்ததையும் பற்றித் தெரியாத திமுக அறிவிலிகளைப் போல, தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். திரு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இவற்றிற்கு பதிலளிக்க வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.