கடனை திரும்ப செலுத்தாத அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

7 November 2020, 10:47 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 26 லட்சம் ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத அரசு பள்ளி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கணவன் மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நீலவாணன். இவர் மணல், மற்றும் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிப்பிரியா, கவிப்பிரியா தனது உறவினரான அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவருக்கு வீடு கட்டுவதற்காக நகை, பணம் என ரூ.26 லட்சம் வழங்கியுள்ளார். பணம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும் அதனை திரும்பி தராததால் செல்வம் மீது ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் கவிப்பிரியாவின் கணவர் நீலவாணன் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பணத்தை வாங்கி ஏமாற்றிய செல்வம், நீலவாணன் மீது தாதுமணல், இரேணியம் கடத்துவதாக பொய் குற்றச்சாட்டுகளை காவல் நிலையத்தில் தொடுத்துள்ளார். இதனிடையை தான் கொடுத்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத ரெட்டியார் பாளையம் காவல் துறையினர் மீதும் இரேணியம் கடத்தியதாக தன் மீது பொய் புகார் அளித்த செல்வம் மீது நடவடிக்கை எடுக்ககோரி நீலவாணன் மற்றும் அவரது மனைவி கவிப்பிரியா ஆகியோர் இன்று காவல் துறை தலைமை அலுவலகத்தில் காவல் துறை இயக்குனரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Views: - 13

0

0