கொரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதி இல்லாமல் எருதுவிடும் விழா: அலட்சியமாக இருந்த பொதுமக்கள்

Author: kavin kumar
23 August 2021, 11:36 pm
Quick Share

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கொரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதி இல்லாமல் எருதுவிடும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரோனாவால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்திருந்த நிலையில் இன்று சில தலைவர்களுடன் ஊரடங்கு நீக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார் இந்நிலையில் அதிகமாக கூட்டம் கூட்ட வேண்டாம் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாமல் முறையாக அனுமதி பெறாமலும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த எரியோடு வைவேஸ்புரத்தில் ஆடு,மாடுகள் போன்ற கால்நடை அடைக்கும் பட்டியை காக்கும் பெண் தெய்வத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேவராட்டம் ஆடி கம்பு, கொழுக்கட்டை, கரும்பு போன்ற நவதானியங்களை படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.

பின்பு விழாவை முன்னிட்டு சில எருதுகளை குறிப்பிட்ட எல்லையில் இருந்து ஓட்டிவிட்டு வெற்றி பெறும் காலை உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் நடைபெற்றது.இதில் சில எருதுகளை அவிழ்த்து விடப்பட்டு ஓட விட்டனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசு குறிப்பிட்டு இருக்கும் அறிக்கையில் ஊரடங்கு தளர்வுகளை பொது மக்கள் அலட்சியமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்து இருந்தது. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் மிகவும் அலட்சியமாக இருப்பதாகவும், இதற்கு தமிழக அரசு பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 211

0

0