வெல்டிங் கடையில் 1 லட்சம் மதிப்பிலான மிஷின்கள் திருட்டு

Author: Udhayakumar Raman
24 June 2021, 2:51 pm
Quick Share

அரியலூர்: இராயம்புரம் கிராமத்தில் உள்ள வெல்டிங் கடையில் 1 லட்சம் மதிப்பிலான மிஷின்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் இராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தனவேல். இவர் அப்பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான வெல்டிங் மிஷின், வெல்டிங் ராடு மற்றும் கடையில் இருந்த 14 ஆயிரம் திருடபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் செந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 305

0

0