பிரியாணி கடை ஊழியரை வழிமறித்து 10 லட்சம் கொள்ளை: சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் விசாரணை

Author: Udhayakumar Raman
29 July 2021, 1:56 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் பிரியாணி கடை ஊழியரை வழிமறித்து 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மண்ணடியை தலைமையிடமாக கொண்டு சென்னை நகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் வசூலான பணத்தை ஊழியர் சுரேந்திரன் என்பவர் வசூல் செய்து சென்னை மண்ணடியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தினமும் கொண்டு செல்வார் என கூறப்படுகிறது. வழக்கம் போல் வசூல் செய்த பணம் 10 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு சுரேந்திரன் இரு சக்கர வாகனத்தில் மண்ணடி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தார்.

வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் சுரேந்திரனை வழிமறித்து தாக்கி அவரிடமிருந்த 10 லட்சத்தை பறித்துச் சென்றது. இது தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளை வியாசர்பாடி போலீசார் ஆய்வு செய்து சந்தேகத்தின் பேரில் 10 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 108

0

0